சனி, 13 மே, 2023

யட்சிணி வசியம்

 நமது நாட்டின் சித்தர்கள் பலர் தங்களின் பல ஆண்டு தவங்களின் மூலம் மனிதர்களுக்கு உதவும் பல அறிய கலைகளை கண்டுபிடித்தனர். அவற்றில் ஒன்று தான் மாந்திரீக கலை. இதில் “யட்சிணி தேவதை வசிய மந்திரம்” மிகவும் பிரபலமானது. நாம் விரும்பும் பல விடயங்களை வழங்க வல்லது. இந்த யட்சிணி தேவதை வசிய மந்திரம் உபாசனை முறைகளை தெரிந்து கொள்வோம்.


யட்சிணி மந்திரம் – காலை

“ஹரி ஓம் ஸ்ரீம் றியும் சர்வலோக மோகினி வா வா  ஐயும் க்லீம் சிவசிவ மோகினிநசி நசி மசி மசிசுவாகா“


யட்சிணி மந்திரம் – மாலை

”ஓம் ஸ்ரீம் க்லீம் சர்வயட்சிணி ஆகர்சணி சௌம் க்லீம் ஓம்

மோகினியட்சணி யஷ குல நாயகி மமவசம் குருகுரு சுவாகா


இந்த யட்சிணி மந்திரத்தை உபாசனை செய்வதற்கு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். முதலில் சொந்த வீடு உள்ளவர்கள் அவர்கள் வீட்டின் பூஜையறையில் இந்த மந்திர உபாசனை செய்ய வேண்டும். 


வாடகை வீட்டிலிருப்பவர்கள் யட்சணி உபாசனையில் ஈடுபட்டு அதில் சித்தி ஏற்பட்டால், மந்திர சித்தியின் பாதி சக்தி அந்த நிலம் அல்லது வீட்டின் உரிமையாளருக்கு சென்று விடும். 


உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நீங்கள் யட்சிணி மந்திர உபாசனை செய்வதை பற்றியோ அல்லது அந்த மந்திரத்தையோ சொல்லக்கூடாது. 


இந்த உபாசனை செய்யும் காலத்தில் போதை வஸ்துக்கள், பெண்கள் தொடர்பு, மாமிச உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்ல பலனை தரும். இம்மந்திரத்தை உங்கள் பூஜையறையில் உபாசிக்கும் போது இறந்து போன உங்கள் முன்னோர்களின் எந்த ஒரு புகைப்படங்களும் இருக்க கூடாது.


யட்சிணி உபாசனையை ஒரு முழு பௌர்ணமி தினத்தன்றே தொடங்க வேண்டும். அன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, உங்கள் குலதெய்வத்தை வணங்க வேண்டும். 


உங்கள் பூஜையறையில் நெய்தீபங்கள் ஏற்றி, பழங்கள், பூக்கள் மற்றும் ஏதேனும் ஒரு உணவு பண்டத்தை படையல் வைத்து, பலா மரம் அல்லது வில்வ மர பீடத்தில் ஒரு வெள்ளை துணி பரப்பி, அதில் கிழக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில் இம்மந்திரத்தை 1008 எண்ணிக்கையில் உரு ஜெபிக்க வேண்டும். மாலை வேளையில் மேற்சொன்ன முறையில் மேற்கு திசையை நோக்கி அமர்ந்தவாறு மந்திர உரு ஜெபிக்க வேண்டும்.


இந்த யட்சிணி மந்திர ஆளுக்கு ஏற்றார் போல் சித்தியாகும். சிலருக்கு 48 நாள் அதாவது ஒரு மண்டலத்திலேயே சித்திக்கும். சிலருக்கு மூன்று மண்டல காலம் கூட ஆகலாம். இந்த மந்திரம் சித்தி ஏற்பட்டவுடன் உங்களுக்கு சில நன்மையான பலன்கள் ஏற்படுவதை அனுபவத்தில் உணரலாம். 


எதிர்காலத்தில் நடக்கக்கூடிய சில விடயங்களை உங்களால் இப்போதே கூற முடியும். பிறருக்கு நன்மை ஏற்படக்கூடிய சில விடயங்களையும் செய்யலாம். மந்திரம் சித்தியானவர்கள் வாழ்நாள் முழுவதும் யட்சிணி பூஜையை மேற்கொள்ள வேண்டும்.


இம்மந்திர உபாசனையை எக்காரணம் கொண்டும் பிறருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் செய்யக்கூடாது. அப்படி செய்யும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.


யட்சிணிகளில் நிறைய வகை உண்டு. சில மந்திரவாதிகள் யட்சிணி வசியம் சொல்லித்தருகிறேன் என்றெல்லாம் சொல்வார்கள். சரியாக தெரியாமல் அதில் இறங்க கூடாது யட்சிணி வசியம் தெரிந்து கொண்டு அதை அரை குறையாகவும் கட்டுப்பாடுகள் இல்லாமலும் செய்தால் மிகுந்த ஆபத்து ஏற்படும் மன நலன் கூட பாதிக்கப்படும்.


1)   தனதா ரதிப்ரியா யக்ஷினி. மூல மந்திரம்:


"ஓம் ரம் ரம் ஸ்ரீம் ஹ்ரீம் தம் தனதே ரதிப்ரியே ஸ்வாஹா//"  


(2)      கனகவதி யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம் ஆகச்ச கனஹவதி ஸ்வாஹா//"

(3)  சிஞ்சி பிசாசினி யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம் க்ரிம் சிஞ்சி பிசாசினி ஸ்வாஹா//" 


(4)  சந்திரிகா யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம்ஹ்ரீம் சந்திரிகே ஹம்ஷ க்லீம் ஸ்வாஹா//" 


(5) அணுராகினி யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம் ஹிரீம் அணுராகினி மைதுணப்ரியே ஸ்வாஹா//" 


(6)   ஸ்வர்ணரேகா யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம் சகம் சகம் சால்மல ஸ்வர்ணரேகா ஸ்வாஹா//" 

(7)  கர்ணபிசாஸிணி யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம்ஹ்ரீம் ச: ச: கம்பலகே கத்வா

பிண்டம் ப்சாசிகே ஸ்வாஹா//" 

(8)  வட யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் வடவாஸிணியஷகுலப்ரஷாதே

வடயக்ஷினி. யேஹ்யேஹி ஸ்வாஹா//"

(9)   பத்மாவதி யக்ஷினி.மூல மந்திரம்:


ஓம் நமோ பஹவதி தரணீந்ரா பத்மாவதி

ஆகச்ச ஆகச்ச கார்யம் குரு குரு யம்ப்ராத்தயே

தம் சீக்ரமேவ தேஹி நாஅகச்சேத்து பரசுநாதஸ்ய

க்ருபாஜ்ஞ்யாஸத்யமேவ குரு குரு  ஸ்வாஹா//" 


(10)  பண்டார பூர்ணா யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம்  ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பவாமே நம ஸ்வாஹா//" 

தம் சீக்ரமேவ தேஹி நாஅகச்சேத்து பரசுநாதஸ்ய

க்ருபாஜ்ஞ்யாஸத்யமேவ குரு குரு  ஸ்வாஹா//" 


யட்சிணி வசியம்

 நமது நாட்டின் சித்தர்கள் பலர் தங்களின் பல ஆண்டு தவங்களின் மூலம் மனிதர்களுக்கு உதவும் பல அறிய கலைகளை கண்டுபிடித்தனர். அவற்றில் ஒன்று தான் மா...

மாயாஜாலம் தளத்தில் பிரபலமான பதிவுகள்