வெள்ளி, 7 அக்டோபர், 2022

குழித்தைலம் இறக்கும் முறை

 மருத்துவத்திற்கும்,மாந்திரீகத்திற்கும் மூலிகைகள் மற்றும் பல சரக்குகளை பயன்படுத்தும்போது அதன் குழித்தைலம் நமக்கு தேவைப்படும்.முறையாக குழித்தைலம் இறக்கவில்லை என்றால் அந்த குழித்தைலம் முழுமையாக பலனளிக்காது.

அந்த குழித்தைலத்தை எப்படி முறைப்படி  இறக்குவது என்று தெரிந்து கொள்ளுங்கள்...



சாதகமான இடத்தில் இரண்டடி அகலம் இரண்டடி நீளம் இரண்டடி ஆழம் கொண்ட ஒரு குழியை தோண்டிக்கொள்ள வேண்டும்.

குழியின் நடுப்பகுதியில் ஒரு சிறு குழியை தோண்டி ஒரு கண்ணாடி குடுவையை வைக்க வேண்டும் அதன் பிறகு ஒரு மண்பானையை எடுத்து அதன் அடிப்பகுதியில் சிறு சிறு துளைகளாக பத்து துளைகள் இட வேண்டும்.

இந்தப்பானையில் நமக்கு எதில் குழித்தைலம் தேவையோ அதைப்போட்டு குழியின் மையப்பகுதில் உள்ள பீங்கான் குடுவைமேல் வைக்கவேண்டும்.

நாம் பானையில் போட்ட பத்து துளைகளும் அந்த பீங்கான் குடுவைக்குள் அடங்கியிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.அப்போதுதான் நாம் இறக்கும் குழித்தைலம் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும்.

இப்போது பானையை சுற்றி வறட்டியால் நிரப்பி விட்டு பானையின் வாய்ப்பகுதியை பானைக்கு சரியான அளவுள்ள மூடியால் சீலைமண்(களிமண்ணை குழைத்து அதில் தோய்த்து எடுத்து துணி)கொண்டு  இறுக்கி மூடி விட வேண்டும்.

வறட்டி முழுவதுமாக எரிந்து முடிந்து  சாம்பலான பிறகு கவனாமாக பானையை இறக்கி விட்டு அதனடியில் உள்ள பீங்கான் குடுவையை எடுத்துப்பார்த்தால் அதில் நாம் இறக்க நினைத்த தைலம் இறங்கியிருக்கும்.

இறக்கிய தைலத்தை பத்திரப்படுத்திக்கொண்டு கையாளும்  முறைகளை கையாண்டு கவனமாக உபயோகிக்க நல்ல பலனைத்தரும்.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...


கருத்துகள் இல்லை:

யட்சிணி வசியம்

 நமது நாட்டின் சித்தர்கள் பலர் தங்களின் பல ஆண்டு தவங்களின் மூலம் மனிதர்களுக்கு உதவும் பல அறிய கலைகளை கண்டுபிடித்தனர். அவற்றில் ஒன்று தான் மா...

மாயாஜாலம் தளத்தில் பிரபலமான பதிவுகள்