பொதுவாக
எருக்கஞ்செடி என்று சொன்னாலே அனைவருக்கும் ஒரு சிறிய பயம் வந்துவிடும்.
ஏனென்றால் எருக்கன் செடிகள் சுடுகாட்டில் அதிகமாக வளர்ந்து இருக்கும்.
அதில் தீயசக்தி இருக்கும் என்று நம் அனைவராலும் நம்பப்படுகிறது.
அது உண்மைதான்.
எருக்கன் செடியில் நல்ல சக்தியானது இருக்கின்றது என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவிற்கு கெட்ட சக்தியும் வந்து தங்கும் என்பது உண்மை. இதன்படி எருக்கன் செடி எந்த இடத்தில் இருக்கின்றதோ அதை வைத்துதான் அதில் நல்ல சக்தி இருக்கிறதா?
கெட்ட சக்தி இருக்கிறதா? என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
பொதுவாகவே எருக்கன் செடியில் வெள்ளை எருக்கன் செடியை தேவ மூலிகை என்று கூறப்படுகிறது.
அதாவது புதையல், தங்கச் சிலைகள், ரத்தினங்கள், இவையெல்லாம் பதுங்கியிருக்கும் அல்லது புதைந்துருக்கும் இடத்தில் இந்த வெள்ளருக்கன் செடி வளரும் என்று பழங்கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி பார்த்தோமேயானால் எருக்கம் செடி இருக்கும் இடத்தில் நிச்சயமாக தெய்வசக்தி இருக்கும் என்பது அர்த்தம். அதேசமயம் இந்தப் புதையலை பாதுகாக்க அந்த எருக்கன் செடி ஓரம் பாம்புகள் இருக்கும் என்றும் சிலரால் கூறப்படுகிறது.
அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை
எனக்கு தெரிந்த வரை
தெய்வீக மூலிகையான வெள்ளை எருக்கன் மூலிகையை தேவையில்லாமல் யாரும் தொட்டு அதன் புனித தன்மை கெட்டுவிடக்கூடாது என்பதற்காக
அதன் வேரில் வெள்ளை நாகம் இருக்கும் என்றும்
அந்த நாகம் தான் அந்த மூலிகையை காக்கும் என்றும் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்
அப்போது தான் சிறுபிள்ளைகள் மாதவிடாய் பெண்கள் அந்த மூலிகை அருகில் செல்ல மாட்டார்கள் இதனால் அந்த மூலிகையின் புனித தன்மை கெடாமல் இருக்கும் என்று என் குருநாதராக என் பாட்டான் எனக்கு கூறிய செய்தி.
மேலும்
இந்த வெள்ளை எருக்கன் மூலிகையை எப்படி எடுக்க வேண்டும்.?
அதனால் நமக்கு என்ன பயன் என்பதை எழுதுகிறேன்.
இந்த இருக்கும் இடத்தில் சுத்தம் செய்து
பசுவின் கோமியம் வேரை சுற்றிலும் தெளித்து விட்டு
பூச நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி அன்று ஞாயிற்று கிழமையாக இருக்க வேண்டும்.
அன்றைய தினத்தில் கற்றாழை நூல் (கன்னி நூல் ) காப்பு அதாவது கற்றாழை நூலில் கஸ்தூரி மஞ்சளை தாலி போன்று கட்டி அதை வெள்ளை எருக்கன் வேரில் மூன்று சுற்று சுற்றி கட்டிய பின்
சாப நிவர்த்தி செய்த பிறகு பிரண பிரதிஷ்டை செய்து
சர்க்கரை பொங்கல் படையல் செய்து
வசிய, அல்லது மோகன மந்திரங்கள் செபித்த பிறகு
அஷ்ட கர்ம மந்திரங்கள் ஒவ்வொன்றும் 108உரு செபித்து முடித்த பிறகு
மூலிகை செடியின் வேர் பகுதியில் இருக்கும் மண்ணை அள்ளி ஆணி வேர் அறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நன்றாக முற்றிய செடியாக இருந்தால் நல்லது
இதில் வடக்கு திசையில் ஓடும் வேர்களை தனியாக எடுத்து தாயத்தில் போட்டு குழந்தைகளுக்கு கட்டினால்
காத்து கருப்பு, பாலகிரக தோஷம், சந்து தோஷம், பட்ஷி தோஷம், குளிதோஷம் என அனைத்து தோஷங்களும் விலகும்.
வெள்ளை எருக்கன் அடிகட்டையில் விநாயகர் பொம்மை செய்து
அதை பூஜையில் வைத்து தினம் ஏதாவது ஒரு கணபதி மந்திரம் செபித்து வந்தால்
வீட்டில் ஐஸ்வர்யங்கள் உண்டாகும்,
அதே கட்டையில் பலகை அறுத்து அதில் சிதம்பர சக்கரம் வரைந்து பூஜை செய்து வந்தால்
இந்த உலகத்தில் ஆகாத காரீயம் என்று எதுவுமே இருக்காது
வசிய சக்கரம் செய்து பூஜித்து வந்தாலும்
சர்வ வசியமும் லட்சுமி கடாஷமும் உண்டாகும்
இந்த செடியின் நாரை உரித்து காய வைத்து
நாரை கயிராக திரித்து சகல தோஷ நிவர்த்தி மந்திரங்கள் செபித்த படி
21முடி போட்டு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கட்டலாம்.
இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து
இதனோடு வெள்ளை எலி கரு சேர்த்து அரைத்து
சுத்தமான வெள்ளை பருத்தி துணியில் பூசி அதை திரியாக உருட்டி
மண் அகலில் போட்டு
வெளவால் நெய் ஊற்றி விளக்கேற்றி
தீபம் எரியும் போது
தேங்காய் ஓட்டில் தீபத்தின் மேல் காட்ட தேங்காய் ஓட்டில் கரி பிடிக்கும் அதை சேகரித்து எடுத்து ஒரு புது சட்டியில் போட்டு காட்டில் வாழும் ஆலாக்குருவி முட்டையை உடைத்து சுற்றிலும் தடவி காயவைக்க மை திரண்டு வரும் அதை வழித்து
செப்பு சிமிழில் அடைத்து பூஜையில் வைத்து
ஆஞ்சநேயர் மந்திரத்தை 1008உரு கொடுத்தால்
மை உயிர் பெரும்.
இதை வெற்றிலையில் தடவி பார்த்தால்
உலகத்தில் நடக்கும் அனைத்தும் தெரியும்.
உடனே ஆலாகுருவியை தேட தோணுமே மனசு.....!!
தேடுங்கள்
தகுந்த குருவின் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கும்
நன்றி.