நாம் ஏற்கனவே முன்னர் ஒரு பதிவில் மூலிகைகளுக்கு உயிர் கொடுக்கும் முறையை பற்றி பதிவிட்டிருக்கின்றோம்...
எந்த ஒரு மூலிகையாக இருந்தாலும் நாம் தேவைக்கு அதனை பறிக்கும்பொழுது சாதாரணமாக பறித்துவிட்டால் அந்த மூலிகையின் குணம் நமக்கு பலனளிக்காமல் போய்விடும்.
முறையாக காப்புக்கட்டி தீபாரதனை காட்டி பொங்கல் முதலியவை வைத்து பூஜை செய்த பின்னர் சாப நிவர்த்தி செய்து அந்த மூலிகைகளுக்கு உயிரூட்ட வேண்டும்.அப்போதுதான் அந்த மூலிகையின் பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும்.
ஒரு சில மூலிகைகளுக்கு சேவல் போன்றவைகள் பழி கொடுக்க வேண்டும்.அது பற்றி இன்னொரு பதிவில் விரிவாக கொள்கின்றேன்.
இன்று அந்த அரிய குணமுள்ள மூலிகைகளுக்கு சாப நிவர்த்தி செய்யும் முறையைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நமக்கு எந்த மூலிகை தேவைப்படுகின்றதோ அந்த மூலிகையை சுற்றி நன்கு சுத்தம் செய்து
பின்னர் வழக்கம்போல் முறையாக பூஜை முறைகளை செய்து
"ஓம் சத்தி சாபம் நசிநசி
சகல சாபம் நசிநசி
சித்தர் சாபம் நசிநசி
மூலிகை சாபம் நசிநசி
சகல தேவர்கள் சாபம் நசிநசி
ஓம் காளி ஓம் பிடாரி
ஓம் நசிமசி வய சுவாகா"... என்கின்ற மந்திரத்தை ஒன்பது தடவை கூறி விட்டு நகம் படாமல் மூலிகைகளை பறிக்க வேண்டும்.
இவ்வாறு முறையாக செய்யும்போது நாம் பறிக்கும் மூலிகையானது முழுமையாக பலனளிக்கும்.அந்த மூலிகையின் சாபம் நம்மை தாக்காமல் காத்துக் கொள்ளலாம்.
நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக