வியாழன், 13 அக்டோபர், 2022

தேள் கொட்டினால் விஷம் ஏறாமல் இருக்கும் வித்தை

தேள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்...

இன்று தேள் கொட்டினால் அதன் விஷம் நம் உடலை பாதிக்காமல் இருக்கும் வித்தையைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


ஆதிவாரம் அதிகாலை சூரியன் உதயத்திற்கு முன்னர் கருங்கருணை மூலிகைக்கு காப்புக்கட்டி பொங்கலிட்டு தீபாரதனை காட்டி தேங்காய் பழம் உடைத்து பூஜை செய்து மூலிகை சாப நிவர்த்தி மந்திரம் கூறிவிட்டு வந்து விடவும்.

பின்னர் சாயங்காலம் சென்று அந்த மூலிகையின் அடி வேரை அறுத்து மோதிரம் போல விரலில் சுற்றிக்கொண்டால் தேள் கொட்டினால் விஷம் உடலில் ஏறாது.

வேண்டும் என்றே தேளை கொட்ட வைத்து வேடிக்கை காட்டினாலும் தேள் விஷத்தினால் ஒன்றம் ஆகாது...

பின் குறிப்பு : தேள் கடித்தவருக்கு இதய நோய்கள் பாதிப்பல்லை.தேளின் விஷமானது இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்து உறைவதை தடுக்கிறது.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...



 

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

பழுத்த இரும்பு சுடாமல் இருக்கச்செய்யும் வித்தை

 நாம் எல்லோருக்குமே கூட்டத்தில் வித்தை காட்ட வேண்டும் என ஆசையாக இருக்கும்.

அப்படி ஆசை உள்ளவர்கள் இந்த வித்தையை செய்து காட்டினால் எல்லோரும் இவர் பெரிய வித்தைகள் தெரிந்தவர் என உங்களை புகழ்ந்து பாராட்டுவார்கள்.

இப்போது வித்தைய எப்படி செய்வது என காணலாம்...



தேவையான பொருட்கள்.

1,வெங்காயச்சாறு

2, கற்றாலைச்சோறு (சதைப்பற்று)

3, விளக்கெண்ணெய், இவை மூன்றையும் ஒன்றாக கலந்து கூழ் போல ஆக்கிக்கொண்டு கைகளில் நன்றாக தடவிக்கொண்டு பழுத்த இரும்பு கம்பியை தொட்டால் அக்கம்பியானது கைகளை சுடாது.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

வெள்ளி, 7 அக்டோபர், 2022

குழித்தைலம் இறக்கும் முறை

 மருத்துவத்திற்கும்,மாந்திரீகத்திற்கும் மூலிகைகள் மற்றும் பல சரக்குகளை பயன்படுத்தும்போது அதன் குழித்தைலம் நமக்கு தேவைப்படும்.முறையாக குழித்தைலம் இறக்கவில்லை என்றால் அந்த குழித்தைலம் முழுமையாக பலனளிக்காது.

அந்த குழித்தைலத்தை எப்படி முறைப்படி  இறக்குவது என்று தெரிந்து கொள்ளுங்கள்...



சாதகமான இடத்தில் இரண்டடி அகலம் இரண்டடி நீளம் இரண்டடி ஆழம் கொண்ட ஒரு குழியை தோண்டிக்கொள்ள வேண்டும்.

குழியின் நடுப்பகுதியில் ஒரு சிறு குழியை தோண்டி ஒரு கண்ணாடி குடுவையை வைக்க வேண்டும் அதன் பிறகு ஒரு மண்பானையை எடுத்து அதன் அடிப்பகுதியில் சிறு சிறு துளைகளாக பத்து துளைகள் இட வேண்டும்.

இந்தப்பானையில் நமக்கு எதில் குழித்தைலம் தேவையோ அதைப்போட்டு குழியின் மையப்பகுதில் உள்ள பீங்கான் குடுவைமேல் வைக்கவேண்டும்.

நாம் பானையில் போட்ட பத்து துளைகளும் அந்த பீங்கான் குடுவைக்குள் அடங்கியிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.அப்போதுதான் நாம் இறக்கும் குழித்தைலம் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும்.

இப்போது பானையை சுற்றி வறட்டியால் நிரப்பி விட்டு பானையின் வாய்ப்பகுதியை பானைக்கு சரியான அளவுள்ள மூடியால் சீலைமண்(களிமண்ணை குழைத்து அதில் தோய்த்து எடுத்து துணி)கொண்டு  இறுக்கி மூடி விட வேண்டும்.

வறட்டி முழுவதுமாக எரிந்து முடிந்து  சாம்பலான பிறகு கவனாமாக பானையை இறக்கி விட்டு அதனடியில் உள்ள பீங்கான் குடுவையை எடுத்துப்பார்த்தால் அதில் நாம் இறக்க நினைத்த தைலம் இறங்கியிருக்கும்.

இறக்கிய தைலத்தை பத்திரப்படுத்திக்கொண்டு கையாளும்  முறைகளை கையாண்டு கவனமாக உபயோகிக்க நல்ல பலனைத்தரும்.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...


புதன், 5 அக்டோபர், 2022

உலகில் அனைத்தும் வசியமாகும் வித்தை

உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும்  வசியம் செய்வது, நமக்கு எதிராக செயல்படுபவர்களை செயல்பட விடாமல் செய்வது, நமக்கு வேண்டாதவர்களை நமக்கு சாதகமாய் வேலை செய்யவைப்பது,எதிரிகளை வணங்க வைப்பது  போன்றவைகள்தான் சர்வலோக வசியம்.

இப்போது இந்த சர்வ லோக வசிய முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.


தேவைப்படும் மூலிகைகள் : 

1,செவ்வகத்தி



2,நின்றால் சிணுங்கி



3,ஆவாரை



4,முல்லை



5,கூத்தன் குதம்பை


ஆகிய மூலிகைகளுக்கு காப்பு கட்டி வழக்கம் போல் முறையாக பூஜை செய்து அனைத்து மூலிகைகளின் வேர்களையும் சம எடையாக எடுத்துக்கொண்டு பன்னீர் விட்டு நன்றாக மை போல அரைத்து சிமிழில் அடைத்து பூஜை அறையில் வைத்து கீழே உள்ள மந்திரத்தை 1008 தடவை உச்சரித்து இந்த மையை உயிரூட்ட வேண்டும்.

நீங்கள் எப்போதும் வெளியே செல்லும்போது இந்த மையை சிறிதளவு  எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு சென்றால் அனைத்து உயிர்களும் (எதிரிகள் உட்பட) உங்களை வணங்கும்.

முக்கியம் : 

பூஜையின் போது கூற வேண்டிய மந்திரம்...

"வசி வசி சகலமும் வசி சர்வலோகமும் வசி சகலரும் வசி".

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

_____________________________________________________

செவ்வாய், 4 அக்டோபர், 2022

செய்வினை வைத்தது யார் என கண்டுபிடிக்கும் வித்தை

 நாம் எல்லோருக்குமே  செய்வினை என்றால் என்ன என்பது நன்றாக தெரிந்து இருக்கும்.

அப்பேர்பட்ட செய்வினையை நமக்கு யார் வைத்திருப்பார்கள் என்ற சிந்தித்திக்கொண்டே இருப்போம் அல்லவா...?

இனிமேல் அப்படி தேவையில்லாமல் மனசை குழப்பி சிந்திக்க தேவையில்லை.

ஏனென்றால் நமக்கு செய்வினையை யார் வைத்திருப்பார்கள் என்று நாமே கண்டுபிடிக்கலாம். 


செய்வினையை வைத்தது யார் என கண்டுபிடிக்கும் வித்தை : 

மலைகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய நிலவாகை என்னும் மூலிகை விதையை பத்து பலம் எடுத்து அதனுடன் தலைமஞ்சள் கொடி மாவு,முப்பூ ஆகிய இரண்டையும் ஒரு விராகன் எடை எடுத்து சேர்த்து நன்றாக அரைத்தெடுத்து வடைபோல தட்டி உலர்த்தி குழித்தைலம் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பின் ஆக்காட்டி குருவியின் முட்டைகளை எடுத்து சிற்றண்ட தைலம்போல இதில் தைலம் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது முன்னர் செய்த நிலவாகை தைலத்தோடு இந்த ஆக்காட்டி குருவி முட்டையின் தைலத்தையும் ஒன்றாக நன்றாக கலந்து ஒரு சிமிழியில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்...

இந்த தைலத்தை உங்களுக்கு தேவைப்படும்போது நீங்கள் யாரை குருவாக மனதில் நினைத்து வழிபடுவீர்களோஅவர்களை நினைத்து வெற்றிலையில் தடவி பார்க்க செய்வினை வைத்தவரின் முகம் நன்றாக தெரியும்.இந்த தைலத்தை வைத்து இதே முறையில் திருடியது யார் என்றும் கண்டுபிடிக்கலாம்.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

_____________________________________________________




திங்கள், 3 அக்டோபர், 2022

புதையல் இருக்குமிடம் அறியும் வித்தை

 வணக்கம்...

நாம் ஏற்கனவே முந்தைய பதிவில் நிலம்புரண்டி மூலிகை பற்றி தெளிவாக பதிவிட்டிருந்தோம்.

இன்று அந்த நிலம்புரண்டி மூலிகையை வைத்து எப்படி புதையலை கண்டுபிடிப்பது என்ற வித்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


 நிலம்புரண்டி மூலிகையை பறிக்க வேண்டிய நாட்கள்.

1,ஞாயிற்றுக்கிழமை 

2,செவ்வாய்க்கிழமை 

3,வியாழக்கிழமை 

இந்த மூன்று கிழமைகளில் ஏதாவது ஒரு நாளில் அதிகாலையில் (சூரியன் உதிக்கும் முன்) சென்று நிலம்புரண்டி மூலிகையை சுற்றி சுத்தம்  செய்து நாம் முந்தைய பதிவில் கூறியது போல சாப நிவர்த்தி செய்து அந்த மூலிகைக்கு உயிரூட்டி,காப்புக்கட்டி முறைப்படி பூஜை செய்து பிடுங்கி வந்து நிலம்புரண்டி மூலிகையை குழித்தைலம் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். 

நிலம்புரண்டி மூலிகையின் குழித்தைலத்தோடு சேர்க்க வேண்டிய மற்ற சரக்குகள்...

1,கோரோசனை

2,ஜவ்வாது 

3,பச்சைக்கற்ப்பூரம் 

இந்த மூன்றையும் சம எடையாக எடுத்து நிலம்புரண்டி மூலிகையின் குழித்தைலத்தோடு நன்றாக குழைத்து நல்ல மை போல் ஆனதும் ஒரு சிமிழில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

மைக்கு உயிரூட்டும் முறை : 

அஞ்சனாதேவி மந்திரம் ஆயிரத்தியெட்டு முறை ஆஞ்சநேய மந்திரம் ஆயிரத்தியெட்டு முறை உச்சரித்து இந்த மைக்கு உயிரூட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவையான போது இந்த மையை ஒரு பாசிப்பயறு அளவு எடுத்து வெற்றிலையில் தடவிப்பார்க்க பாதளத்தில் உள்ள புதையல்கள் வெற்றிலை மீது நன்றாக தென்படும்.

நிலம்புரண்டி மூலிகையின் வேரை நன்றாக தீயில் கருக்கி சுத்தமான நீரில் கரைத்து  புதையல் இருக்கும் என்று நினைக்கும் இடத்தில் ஊற்றிவிட்டு வந்துவிட வேண்டும்.

மறுநாள் சென்று பார்க்கும்பொழுது அந்த இடம் வறண்ட கரிசல் பூமி போல வெடித்து இருந்தால் அந்த இடத்தில் புதையல் உள்ளது என்று அர்த்தம். அவ்வாறு வெடிக்கவில்லை என்றால் அங்கு ஒன்றும் இல்லை என்று அர்த்தம்.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...


ஞாயிறு, 2 அக்டோபர், 2022

மாயாஜால வித்தைகள் கைகூட ஜாலக்காள்தேவி வசியம்...

 வணக்கம் 

மாயாஜால வித்தைகள்

சித்து விளையாட்டுகள் 

மந்திரம்

தந்திரம் 

போன்றவை கைகூடி வர வேண்டும் என்றால் ஜாலக்காள் தேவியை முறையாக வசியம் செய்ய வேண்டியது மிக மிக முக்கியம்.

ஜாலக்காள் தேவியை வசியம் செய்யாமல் எந்தவித வித்தைகளும்,மந்திர,தந்திர வேலைகளும் சாத்தியமில்லை...



ஜாலக்காள்தேவியை வசியம் செய்யும் மந்திரம்...

"ஆம் றியும் அவ்வும் ஐயும் ஜாலாக்காள் தேவி ஆக்ரூஷய றாறா" 

என்கிற அதி அற்புதமான  மந்திரத்தை 

தேங்காய்

பழம்

வெற்றிலை

பாக்கு

பொங்கல்

போன்றவைகள் படைத்து வழக்கம்போல் முறையாக பூஜை செய்து தீபாரதனை காட்டிவிட்டு வடக்கு நோக்கி அமர்ந்து நாற்பத்தியெட்டு நாட்கள் ஒரு லட்சம் தடவை உச்சரிக்க இந்த ஜாலக்காள்தேவி வசிய மந்திரம் உயிர் பெற்று ஜாலக்காள்தேவி நமக்கு வசியமாவாள்.

நினைத்த வித்தைகள் முறையாக செய்ய நமக்கு வசப்படும்...

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

   




சனி, 1 அக்டோபர், 2022

பிரயாணம் போகும்போது முக்கியமாக கவனிக்க

 நாம் எல்லோரும் வெளியூர் செல்லும் போது சகுனம் பார்த்து செல்வது மிக மிக  அவசியம்...

ஒரு சிலர் வெளியே கிளம்பும் போது எதிரே தென்படுவதை வைத்து சகுனம் பார்த்து செல்வார்கள்.

இன்னும் ஒரு சிலர் வேறு ஏதாவது முறையில் சகுனம் பார்த்து செல்வார்கள்.

ஆனால் வெளியூர் பிரயாணம் மேற்க்கொள்ளும்போது சாஸ்திரம் பார்த்து செல்வது மிக மிக முக்கியம்.

நாம் இப்போது பிரயாண சாஸ்திரத்தின் மிக முக்கியமான ஒன்றை மட்டும் பார்க்கலாம்.மற்றவை அடுத்தடுத்த வேறு பதிவுகளில் பதிவிடுகிறேன்.


திருவாதிரை,பரணி,கிருத்திகை,ஆயில்யம்,

பூரம்,பூராடம்,பூரட்டாதி,விசாகம்,சுவாதி,

சித்திரை,மகம்,கேட்டை போன்ற 12 நட்சத்திரங்கள் வரும் நாட்களிள் பிரயாணம் போகவே கூடாது.மரணம் கூட சம்பவிக்கும்.

மிக அவசியம்,போய்த்தான் ஆக வேண்டும் என்றால் அதற்கு சில வழிமுறைகள் உண்டு அது பற்றி வேறு ஒரு பதிவில் பதிவிடுகின்றேன்.

முக்கிய குறிப்பு : இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் கடன் கொடுத்தாலும்,வியாதி வந்து படுத்தாலும் மீளவே முடியாது.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

_____________________________________________________




யட்சிணி வசியம்

 நமது நாட்டின் சித்தர்கள் பலர் தங்களின் பல ஆண்டு தவங்களின் மூலம் மனிதர்களுக்கு உதவும் பல அறிய கலைகளை கண்டுபிடித்தனர். அவற்றில் ஒன்று தான் மா...

மாயாஜாலம் தளத்தில் பிரபலமான பதிவுகள்