அனைவருக்கும் எச்சரிக்கை...
கவனம் தேவை
கவனம் தேவை
கவனம் தேவை
மூலிகையின் படம் வீடியோ கடைசியில் இணைக்கப்பட்டுள்ளது.
நாம் இந்த வீடியோவில் காணப்போகும் ஓடுவன் மூலிகையை கையாளும் முன் இந்த மூலிகையைப்பற்றி நன்கு அறிந்தவர்களிடம் விபரம் கேட்டு அதன் பின்னர் இந்த ஓடுவன் மூலிகையை பயன்படுத்தவும்.
ஓடுவன் என்கின்ற ஒட்டந்தழை மூலிகை மிகவும் ஆபத்தான ஒரு மூலிகையாகும்.கவனமாக பயன்படுத்த வேண்டும்.அஜாக்கிரதையாக பயன்படுத்தினால் உயிர் போய்விடும்.
சித்த மருத்துவத்தில் இந்த ஓடுவன்
மூலிகையை மனித உடலின் வெளிப்புற மருத்துவத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.அது பற்றிய விபரக்குறிப்பு கிடைத்ததும் விரிவாக வேறு ஒரு வீடியோ பதிவிடப்படும்.
இப்போது இந்த ஓடுவன் மூலிகையை வைத்து கொடிய மிருகங்களை எப்படி நம்மை தாக்காமல் மிரண்டு ஓட வைப்பது என்கிற வித்தையை காணலாம்.
பிரதமை திதியில் அதிகாலை வேளையில் இந்த ஓடுவன் மூலிகைக்கு காப்புக்கட்டி,மூலிகை சாப நிவர்த்தி மந்திரம் கூறி பூஜையை வழக்கம்போல் முறையாக செய்து விட்டு வந்து விடவேண்டும்.
பூஜையின் போது கூற வேண்டிய மந்திரம் :
"ஹரிஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் ஹரிஓம் சுவாகா"
இந்த மந்திரத்தை 1008 தடவை ஜபிக்க வேண்டும்.
பின்னர் மறுநாள் மதியம் சென்று இந்த ஓடுவன் மூலிகையின் வடக்கு பார்த்து போகும் வேரை வெட்டிக்கொண்டு வந்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.
ஓடுவன் மூலிகையின் இந்த அரைத்த விழுதை நாம் காட்டுக்கு எப்போதாவது நம்முடைய தேவைக்கு செல்லும் போது கொடிய மிருகங்கள் நம்மை தாக்க வந்தால் அந்த மிருகத்தின் மேல் அதன் பெயரை சொல்லி இந்த விழுதை கொஞ்சம் எடுத்து எறிந்தால் அந்த கொடிய மிருகம் அந்த இடத்திலேயே நிலைதடுமாறி சுருண்டு மாண்டு போகும்.
மீண்டும் ஒரு முறை கண்டிப்புடன் கூறுகிறேன்,இந்த மூலிகையை பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் ஜாக்கிரதையாக கையாளவும்.
மூலிகையின் படம் யூடியூப் வீடியோவில் உள்ளது, பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அரிய தகவல்கள் தொடரும்...கொடிய மிருகங்களை கொல்லும் மூலிகை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக