உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் வசியம் செய்வது, நமக்கு எதிராக செயல்படுபவர்களை செயல்பட விடாமல் செய்வது, நமக்கு வேண்டாதவர்களை நமக்கு சாதகமாய் வேலை செய்யவைப்பது,எதிரிகளை வணங்க வைப்பது போன்றவைகள்தான் சர்வலோக வசியம்.
இப்போது இந்த சர்வ லோக வசிய முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவைப்படும் மூலிகைகள் :
1,செவ்வகத்தி
2,நின்றால் சிணுங்கி
3,ஆவாரை
4,முல்லை
5,கூத்தன் குதம்பை
ஆகிய மூலிகைகளுக்கு காப்பு கட்டி வழக்கம் போல் முறையாக பூஜை செய்து அனைத்து மூலிகைகளின் வேர்களையும் சம எடையாக எடுத்துக்கொண்டு பன்னீர் விட்டு நன்றாக மை போல அரைத்து சிமிழில் அடைத்து பூஜை அறையில் வைத்து கீழே உள்ள மந்திரத்தை 1008 தடவை உச்சரித்து இந்த மையை உயிரூட்ட வேண்டும்.
நீங்கள் எப்போதும் வெளியே செல்லும்போது இந்த மையை சிறிதளவு எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு சென்றால் அனைத்து உயிர்களும் (எதிரிகள் உட்பட) உங்களை வணங்கும்.
முக்கியம் :
பூஜையின் போது கூற வேண்டிய மந்திரம்...
"வசி வசி சகலமும் வசி சர்வலோகமும் வசி சகலரும் வசி".
நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...
_____________________________________________________












