சனி, 13 மே, 2023

யட்சிணி வசியம்

 நமது நாட்டின் சித்தர்கள் பலர் தங்களின் பல ஆண்டு தவங்களின் மூலம் மனிதர்களுக்கு உதவும் பல அறிய கலைகளை கண்டுபிடித்தனர். அவற்றில் ஒன்று தான் மாந்திரீக கலை. இதில் “யட்சிணி தேவதை வசிய மந்திரம்” மிகவும் பிரபலமானது. நாம் விரும்பும் பல விடயங்களை வழங்க வல்லது. இந்த யட்சிணி தேவதை வசிய மந்திரம் உபாசனை முறைகளை தெரிந்து கொள்வோம்.


யட்சிணி மந்திரம் – காலை

“ஹரி ஓம் ஸ்ரீம் றியும் சர்வலோக மோகினி வா வா  ஐயும் க்லீம் சிவசிவ மோகினிநசி நசி மசி மசிசுவாகா“


யட்சிணி மந்திரம் – மாலை

”ஓம் ஸ்ரீம் க்லீம் சர்வயட்சிணி ஆகர்சணி சௌம் க்லீம் ஓம்

மோகினியட்சணி யஷ குல நாயகி மமவசம் குருகுரு சுவாகா


இந்த யட்சிணி மந்திரத்தை உபாசனை செய்வதற்கு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். முதலில் சொந்த வீடு உள்ளவர்கள் அவர்கள் வீட்டின் பூஜையறையில் இந்த மந்திர உபாசனை செய்ய வேண்டும். 


வாடகை வீட்டிலிருப்பவர்கள் யட்சணி உபாசனையில் ஈடுபட்டு அதில் சித்தி ஏற்பட்டால், மந்திர சித்தியின் பாதி சக்தி அந்த நிலம் அல்லது வீட்டின் உரிமையாளருக்கு சென்று விடும். 


உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நீங்கள் யட்சிணி மந்திர உபாசனை செய்வதை பற்றியோ அல்லது அந்த மந்திரத்தையோ சொல்லக்கூடாது. 


இந்த உபாசனை செய்யும் காலத்தில் போதை வஸ்துக்கள், பெண்கள் தொடர்பு, மாமிச உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்ல பலனை தரும். இம்மந்திரத்தை உங்கள் பூஜையறையில் உபாசிக்கும் போது இறந்து போன உங்கள் முன்னோர்களின் எந்த ஒரு புகைப்படங்களும் இருக்க கூடாது.


யட்சிணி உபாசனையை ஒரு முழு பௌர்ணமி தினத்தன்றே தொடங்க வேண்டும். அன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, உங்கள் குலதெய்வத்தை வணங்க வேண்டும். 


உங்கள் பூஜையறையில் நெய்தீபங்கள் ஏற்றி, பழங்கள், பூக்கள் மற்றும் ஏதேனும் ஒரு உணவு பண்டத்தை படையல் வைத்து, பலா மரம் அல்லது வில்வ மர பீடத்தில் ஒரு வெள்ளை துணி பரப்பி, அதில் கிழக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில் இம்மந்திரத்தை 1008 எண்ணிக்கையில் உரு ஜெபிக்க வேண்டும். மாலை வேளையில் மேற்சொன்ன முறையில் மேற்கு திசையை நோக்கி அமர்ந்தவாறு மந்திர உரு ஜெபிக்க வேண்டும்.


இந்த யட்சிணி மந்திர ஆளுக்கு ஏற்றார் போல் சித்தியாகும். சிலருக்கு 48 நாள் அதாவது ஒரு மண்டலத்திலேயே சித்திக்கும். சிலருக்கு மூன்று மண்டல காலம் கூட ஆகலாம். இந்த மந்திரம் சித்தி ஏற்பட்டவுடன் உங்களுக்கு சில நன்மையான பலன்கள் ஏற்படுவதை அனுபவத்தில் உணரலாம். 


எதிர்காலத்தில் நடக்கக்கூடிய சில விடயங்களை உங்களால் இப்போதே கூற முடியும். பிறருக்கு நன்மை ஏற்படக்கூடிய சில விடயங்களையும் செய்யலாம். மந்திரம் சித்தியானவர்கள் வாழ்நாள் முழுவதும் யட்சிணி பூஜையை மேற்கொள்ள வேண்டும்.


இம்மந்திர உபாசனையை எக்காரணம் கொண்டும் பிறருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் செய்யக்கூடாது. அப்படி செய்யும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.


யட்சிணிகளில் நிறைய வகை உண்டு. சில மந்திரவாதிகள் யட்சிணி வசியம் சொல்லித்தருகிறேன் என்றெல்லாம் சொல்வார்கள். சரியாக தெரியாமல் அதில் இறங்க கூடாது யட்சிணி வசியம் தெரிந்து கொண்டு அதை அரை குறையாகவும் கட்டுப்பாடுகள் இல்லாமலும் செய்தால் மிகுந்த ஆபத்து ஏற்படும் மன நலன் கூட பாதிக்கப்படும்.


1)   தனதா ரதிப்ரியா யக்ஷினி. மூல மந்திரம்:


"ஓம் ரம் ரம் ஸ்ரீம் ஹ்ரீம் தம் தனதே ரதிப்ரியே ஸ்வாஹா//"  


(2)      கனகவதி யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம் ஆகச்ச கனஹவதி ஸ்வாஹா//"

(3)  சிஞ்சி பிசாசினி யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம் க்ரிம் சிஞ்சி பிசாசினி ஸ்வாஹா//" 


(4)  சந்திரிகா யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம்ஹ்ரீம் சந்திரிகே ஹம்ஷ க்லீம் ஸ்வாஹா//" 


(5) அணுராகினி யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம் ஹிரீம் அணுராகினி மைதுணப்ரியே ஸ்வாஹா//" 


(6)   ஸ்வர்ணரேகா யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம் சகம் சகம் சால்மல ஸ்வர்ணரேகா ஸ்வாஹா//" 

(7)  கர்ணபிசாஸிணி யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம்ஹ்ரீம் ச: ச: கம்பலகே கத்வா

பிண்டம் ப்சாசிகே ஸ்வாஹா//" 

(8)  வட யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் வடவாஸிணியஷகுலப்ரஷாதே

வடயக்ஷினி. யேஹ்யேஹி ஸ்வாஹா//"

(9)   பத்மாவதி யக்ஷினி.மூல மந்திரம்:


ஓம் நமோ பஹவதி தரணீந்ரா பத்மாவதி

ஆகச்ச ஆகச்ச கார்யம் குரு குரு யம்ப்ராத்தயே

தம் சீக்ரமேவ தேஹி நாஅகச்சேத்து பரசுநாதஸ்ய

க்ருபாஜ்ஞ்யாஸத்யமேவ குரு குரு  ஸ்வாஹா//" 


(10)  பண்டார பூர்ணா யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம்  ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பவாமே நம ஸ்வாஹா//" 

தம் சீக்ரமேவ தேஹி நாஅகச்சேத்து பரசுநாதஸ்ய

க்ருபாஜ்ஞ்யாஸத்யமேவ குரு குரு  ஸ்வாஹா//" 


வெள்ளி, 13 ஜனவரி, 2023

அதிக சாதம் உண்ணும் வித்தை

 அனைவருக்கும் வணக்கம்...

இது உங்கள் அரிய தகவல்கள் சேனல்.


இப்போது நாம் காணப்போகும் வித்தை அதிக சாதம் சாப்பிடுவது எப்படி என்பது.


அதற்கு முன் நம்முடைய சேனலை கண்டிப்பாக சப்ஸ்கிரைப் பண்ணுங்க...

பல அரிய தகவல்கள் மற்றும் வித்தைகள்  தெரிந்துகொள்ளலாம். 


சரி வாங்க அதிக சாப்பாடு சாப்பிடும் வித்தையை தெரிந்து கொள்ளலாம்.


இது ஒரு எளிதாக கிடைக்க கூடிய மூலிகையை வைத்து செய்யும் எளிய முறைதான் என்றாலும்கூட நிறைய பேருக்கு தெரியாது.


தேவையான மூலிகைகளின் வேர்


1,குப்பைமேனி வேர் 

2,சிறுகண்பீளை வேர் 


இரண்டு வேர்களையும் சிறிதளவு சமமாக எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்றுவிட்டு தாடையில் ஒதுக்கி விட்டு கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு சாப்பிட எவ்வளவு சாதமானாலும் சாப்பிடலாம்.பசி மிகுதியாயிருக்கும்.


இன்னொரு முறை இருக்கின்றது,அது ஆபத்து நிறைந்தது.அது பற்றிய தகவல் இப்போது வேண்டாம்.பின்னர் பார்க்கலாம்.


நன்றி...

சப்ஸ்கிரைப் பண்ணுங்க 

லைக் பண்ணுங்க 

கமெண்ட் பண்ணுங்க 

சேர் பண்ணுங்க 

அரிய தகவல்கள்.


அரிய தகவல்கள் தொடரும்...

மறக்காமல் நம்முடைய சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க...

சேனல் லிங்க்

கோழி முட்டை தானாக சுழலும் வித்தை

 வணக்கம் இது உங்கள் அரிய தகவல்கள் சேனல்.


நம்முடைய அரிய தகவல்கள் யூடியூப்  சேனலில் பல அரிய தகவல்கள் தொடர்ந்து வெளிவரும்.


எதையும் மிஸ் பண்ணாமல் பார்க்க உடனே சப்ஸ்கிரைப் பண்ணுங்க...


இப்போது ஒரு கோழி முட்டையை தானாக எப்படி உருள வைப்பது என்ற வித்தையைப்பற்றி  காணலாம்.


கோழி முட்டையை தானாக உருள வைக்கும் வித்தையை செய்ய தேவையானவை : 


1,வெள்ளைக்குண்டுமணி செடியின் வடக்கு பார்த்து போகும் வேர்

2,வெள்ளை மாடப்புறா பிச்சு

3,பொன்னரிதாரம்

4,பாவட்டையிலை

ஆகியவற்றை சமமாக எடுத்துக்கொண்டு  நன்றாக அரைக்கவும்.


 ஒரு முட்டையை எடுத்து அதன் மீது சுற்றிலும் அரைத்த கலவையை நன்றாக பூசி விட்டு கூட்டத்தினர் முன் இந்த முட்டையை கீழே வைத்தால் உருண்டு கொண்டே வரும்.அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.


அரிய தகவல்கள் தொடரும்...

கொடிய மிருகங்களை நிலைதடுமாறி சுருண்டு மாண்டு போகும் வித்தை

 


அனைவருக்கும் எச்சரிக்கை...

கவனம் தேவை

கவனம் தேவை 

கவனம் தேவை 


மூலிகையின் படம் வீடியோ கடைசியில் இணைக்கப்பட்டுள்ளது.


நாம் இந்த வீடியோவில் காணப்போகும் ஓடுவன் மூலிகையை கையாளும் முன் இந்த மூலிகையைப்பற்றி நன்கு அறிந்தவர்களிடம் விபரம் கேட்டு அதன் பின்னர் இந்த ஓடுவன் மூலிகையை பயன்படுத்தவும்.


ஓடுவன் என்கின்ற ஒட்டந்தழை மூலிகை மிகவும் ஆபத்தான ஒரு மூலிகையாகும்.கவனமாக பயன்படுத்த வேண்டும்.அஜாக்கிரதையாக பயன்படுத்தினால் உயிர் போய்விடும்.


சித்த மருத்துவத்தில் இந்த ஓடுவன் 

மூலிகையை மனித உடலின் வெளிப்புற மருத்துவத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.அது பற்றிய விபரக்குறிப்பு கிடைத்ததும் விரிவாக வேறு ஒரு வீடியோ பதிவிடப்படும்.


இப்போது இந்த ஓடுவன் மூலிகையை வைத்து கொடிய மிருகங்களை எப்படி நம்மை தாக்காமல் மிரண்டு ஓட வைப்பது என்கிற வித்தையை காணலாம்.


பிரதமை திதியில் அதிகாலை வேளையில் இந்த ஓடுவன் மூலிகைக்கு காப்புக்கட்டி,மூலிகை சாப நிவர்த்தி மந்திரம் கூறி பூஜையை வழக்கம்போல் முறையாக செய்து விட்டு வந்து விடவேண்டும்.


பூஜையின் போது கூற வேண்டிய மந்திரம் : 


"ஹரிஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் ஹரிஓம் சுவாகா" 

இந்த மந்திரத்தை 1008 தடவை ஜபிக்க வேண்டும்.


பின்னர் மறுநாள் மதியம் சென்று இந்த ஓடுவன் மூலிகையின் வடக்கு பார்த்து போகும் வேரை வெட்டிக்கொண்டு வந்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.


ஓடுவன் மூலிகையின் இந்த அரைத்த விழுதை நாம் காட்டுக்கு எப்போதாவது நம்முடைய தேவைக்கு செல்லும் போது கொடிய மிருகங்கள் நம்மை தாக்க வந்தால் அந்த மிருகத்தின் மேல் அதன் பெயரை சொல்லி இந்த விழுதை கொஞ்சம் எடுத்து எறிந்தால் அந்த கொடிய மிருகம் அந்த இடத்திலேயே நிலைதடுமாறி சுருண்டு மாண்டு போகும்.


மீண்டும் ஒரு முறை கண்டிப்புடன் கூறுகிறேன்,இந்த மூலிகையை பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் ஜாக்கிரதையாக கையாளவும்.


மூலிகையின் படம் யூடியூப் வீடியோவில் உள்ளது, பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 


அரிய தகவல்கள் தொடரும்...கொடிய மிருகங்களை கொல்லும் மூலிகை

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

மந்திர விபூதி நீங்களே செய்யலாம்

 அனைத்து காரியங்களும் வெற்றியாக...

நாம் நினைத்த காரியங்கள் ஜெயமாக...

அதி அற்புதமான மந்திர சக்தி கொண்ட விபூதியை நாம் எல்லோருமே எப்படி சொந்தமாக தயாரிக்கலாம் என விரிவாக தெரிந்து கொள்வோம்.




தேவையான பொருட்கள் : 

1,வில்வ இலை

2,கண்டங்கத்திரி இலை

3,தும்பை இலை

4,கரு ஊமத்தன் இலை

5,கொன்றைமலர் 

6,ஆலமர இலை

7,அரசமர இலை

8,கற்பூர வில்வம்

9,மகா வில்வம்

10, தர்ப்பைப்புல் 


இவை அனைத்தையும் சமமாக எடுத்துக்கொண்டு உங்களுக்கு எவ்வளவு விபூதி தேவைப்படுகின்றதோ அந்த அளவிற்கு பசுஞ்சாணத்தில் 

கலந்து வரட்டியாக  தட்டி ஒரு வாரம் நன்றாக வெயிலில் காய வைத்து புது சட்டி வாங்கி  அதில் அனைத்தும் போட்டு எரித்து சாம்பலை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இதனுடன் கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்துக்கொள்ளவும்.


தேவையான பொருட்கள் : 

ஜவ்வாது

பச்சைக் கற்பூரம்

குங்குமப்பூ

ஏலக்காய்

கிராம்பு

ஜாதிபத்திரி

சுத்தமான புனுகு

சுத்தமான அம்பர்

சுத்தமான கோரோசனை

சுத்தமான  கஸ்தூரி

நவபாஷாணம்  ( ஒன்பதும் தேவை )

சுத்தமான அர்த்தர்

சுத்தமான பன்னீர் மற்றும் 


சிறிதளவு பஞ்சகவ்யம்,

( பஞ்சகவ்யம் என்பது பசுஞ்சாணம்,பசுங்கோமியம்,பசுந்தயிர்,பசும்பால்,பசு நெய் ஆகிய ஐந்தும் கலந்து செய்யப்படும் பொருளாகும் ).இவை அனைத்தையும் பொடிசெய்து நாம் ஏற்கனவே தயாரித்த சாம்பலுடன் கலந்து நன்றாக காய வைக்க வேண்டும்.


பிறகு ஒரு மெல்லிய பருத்தி துணியில் கொட்டி நன்றாக சலிக்க வேண்டும்.சலித்த பிறகு வரும் சுத்தமான விபூதியை புதிதாக ஒரு வெள்ளை நிற பருத்தி துணியில் இந்த விபூதியை கொட்டி ஏதாவது ஒரு பழைய சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள சிவலிங்கத்திற்கு நாம் கொண்டு செல்லும் துணி பையுடன் விபூதியை அபிஷேகம் செய்ய வேண்டும்.


அப்படி செய்து சேகரித்த புனிதமான அந்த விபூதியை ஒரு வில்வம்பழ குடுவையிலோ அல்லது செம்பு பாத்திரத்திலோ சேகரித்து வைத்துக்கொண்டு, கீழ்வரும் மந்திரத்தை 10 ஆயிரத்து எட்டு தடவை ஜெபிக்க வேண்டும் மந்திரம் ஜெபிக்கும் பொழுது இந்த விபூதியை நம் கையில் வைத்துக் கொண்டு வடக்கு முகமாக அமர்ந்து மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.


உச்சரிக்க வேண்டிய மந்திரம் : 

ஓம்  ஸ்ரீம் க்ரீம் ஹ்ரீம் க்லீம்  க்லௌம்  நமசிவய யநமசிவ வயநமசி சிவயநம மசிவயந எனக்கு அனைத்தும் வசி   வசி சிவ சிவ ஸ்வாக 


இந்த மந்திரத்தை ஒருமுகமாக 10008 தடவை ஜெபித்து பிறகு விபூதியை நாம் தினமும் வைத்துக்கொண்டு சென்றால் நாம் நினைக்கும் அத்தனை விஷயங்களும் நடக்கும்.அனைத்து காரியங்களும் நூற்றுக்கு நூறு சாத்தியமாகும். சிவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

நன்றி 

அரிய தகவல்கள் தொடரும் ...

வியாழன், 13 அக்டோபர், 2022

தேள் கொட்டினால் விஷம் ஏறாமல் இருக்கும் வித்தை

தேள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்...

இன்று தேள் கொட்டினால் அதன் விஷம் நம் உடலை பாதிக்காமல் இருக்கும் வித்தையைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


ஆதிவாரம் அதிகாலை சூரியன் உதயத்திற்கு முன்னர் கருங்கருணை மூலிகைக்கு காப்புக்கட்டி பொங்கலிட்டு தீபாரதனை காட்டி தேங்காய் பழம் உடைத்து பூஜை செய்து மூலிகை சாப நிவர்த்தி மந்திரம் கூறிவிட்டு வந்து விடவும்.

பின்னர் சாயங்காலம் சென்று அந்த மூலிகையின் அடி வேரை அறுத்து மோதிரம் போல விரலில் சுற்றிக்கொண்டால் தேள் கொட்டினால் விஷம் உடலில் ஏறாது.

வேண்டும் என்றே தேளை கொட்ட வைத்து வேடிக்கை காட்டினாலும் தேள் விஷத்தினால் ஒன்றம் ஆகாது...

பின் குறிப்பு : தேள் கடித்தவருக்கு இதய நோய்கள் பாதிப்பல்லை.தேளின் விஷமானது இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்து உறைவதை தடுக்கிறது.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...



 

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

பழுத்த இரும்பு சுடாமல் இருக்கச்செய்யும் வித்தை

 நாம் எல்லோருக்குமே கூட்டத்தில் வித்தை காட்ட வேண்டும் என ஆசையாக இருக்கும்.

அப்படி ஆசை உள்ளவர்கள் இந்த வித்தையை செய்து காட்டினால் எல்லோரும் இவர் பெரிய வித்தைகள் தெரிந்தவர் என உங்களை புகழ்ந்து பாராட்டுவார்கள்.

இப்போது வித்தைய எப்படி செய்வது என காணலாம்...



தேவையான பொருட்கள்.

1,வெங்காயச்சாறு

2, கற்றாலைச்சோறு (சதைப்பற்று)

3, விளக்கெண்ணெய், இவை மூன்றையும் ஒன்றாக கலந்து கூழ் போல ஆக்கிக்கொண்டு கைகளில் நன்றாக தடவிக்கொண்டு பழுத்த இரும்பு கம்பியை தொட்டால் அக்கம்பியானது கைகளை சுடாது.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

வெள்ளி, 7 அக்டோபர், 2022

குழித்தைலம் இறக்கும் முறை

 மருத்துவத்திற்கும்,மாந்திரீகத்திற்கும் மூலிகைகள் மற்றும் பல சரக்குகளை பயன்படுத்தும்போது அதன் குழித்தைலம் நமக்கு தேவைப்படும்.முறையாக குழித்தைலம் இறக்கவில்லை என்றால் அந்த குழித்தைலம் முழுமையாக பலனளிக்காது.

அந்த குழித்தைலத்தை எப்படி முறைப்படி  இறக்குவது என்று தெரிந்து கொள்ளுங்கள்...



சாதகமான இடத்தில் இரண்டடி அகலம் இரண்டடி நீளம் இரண்டடி ஆழம் கொண்ட ஒரு குழியை தோண்டிக்கொள்ள வேண்டும்.

குழியின் நடுப்பகுதியில் ஒரு சிறு குழியை தோண்டி ஒரு கண்ணாடி குடுவையை வைக்க வேண்டும் அதன் பிறகு ஒரு மண்பானையை எடுத்து அதன் அடிப்பகுதியில் சிறு சிறு துளைகளாக பத்து துளைகள் இட வேண்டும்.

இந்தப்பானையில் நமக்கு எதில் குழித்தைலம் தேவையோ அதைப்போட்டு குழியின் மையப்பகுதில் உள்ள பீங்கான் குடுவைமேல் வைக்கவேண்டும்.

நாம் பானையில் போட்ட பத்து துளைகளும் அந்த பீங்கான் குடுவைக்குள் அடங்கியிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.அப்போதுதான் நாம் இறக்கும் குழித்தைலம் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும்.

இப்போது பானையை சுற்றி வறட்டியால் நிரப்பி விட்டு பானையின் வாய்ப்பகுதியை பானைக்கு சரியான அளவுள்ள மூடியால் சீலைமண்(களிமண்ணை குழைத்து அதில் தோய்த்து எடுத்து துணி)கொண்டு  இறுக்கி மூடி விட வேண்டும்.

வறட்டி முழுவதுமாக எரிந்து முடிந்து  சாம்பலான பிறகு கவனாமாக பானையை இறக்கி விட்டு அதனடியில் உள்ள பீங்கான் குடுவையை எடுத்துப்பார்த்தால் அதில் நாம் இறக்க நினைத்த தைலம் இறங்கியிருக்கும்.

இறக்கிய தைலத்தை பத்திரப்படுத்திக்கொண்டு கையாளும்  முறைகளை கையாண்டு கவனமாக உபயோகிக்க நல்ல பலனைத்தரும்.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...


யட்சிணி வசியம்

 நமது நாட்டின் சித்தர்கள் பலர் தங்களின் பல ஆண்டு தவங்களின் மூலம் மனிதர்களுக்கு உதவும் பல அறிய கலைகளை கண்டுபிடித்தனர். அவற்றில் ஒன்று தான் மா...

மாயாஜாலம் தளத்தில் பிரபலமான பதிவுகள்